கவிதைகள்


இளம்  கவிஞர் வாழைக்குமாரின் முதல் கவிதைகளை இத்தொகுப்பில் வாசித்த அனுபவம் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவதாக இருந்தது.

‘ பகலில் தோன்றினால் மட்டும்
  நிலவு என்ன
  சுட்டு விடவா போகிறது'

     என்கிற வரிகளோடு தன் கவிதைப்பயணத்தைத் துவக்கிய வாழைக்குமார் எந்த மூத்த கவிஞரின் பாணியையும் மொழியையும் பின்பற்றாமல் தனக்கான சொந்த மொழியில் சொந்த நடையில் இக்கவிதைகள் யாவற்றையும் எழுதியிருக்கிறார்.அதுதான் எனக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கக் காரணமாக அமைந்தது.

   கவிதையாக்குவதற்கான எந்த மெனக்கெட்ட யத்தனிப்புகளுமின்றி வரிகள் தன் பாதையில் இயல்பாகக் கடந்து செல்கின்றன.

பிளக்ஸ் பேனர் திரை மறைவில்
குளித்து உடை மாற்றும்
பிளாட்பாரவாசிப் பெண்கள்
அருகில் நிறுத்தப்பட்டிருக்கும்
ஸ்கூட்டரிலோ அல்லது
கார் கண்ணாடியிலோ
தங்களின் முகம் பார்த்து
அலங்கரித்துக் கொள்கிறார்கள்
பூவும் பொட்டும்
தோடும் மூக்குத்தியும்
தங்கமும் வைரமும்
பவுடரும் வாசனை திரவியமும்
இன்னபிற ஏதுமின்றி..

      என்று சிரமப்படுத்தாத மொழியில் உருளும் இக்கவிதை வரிகள் வாசக மனதில் வேதனை ரேகைகளைப் பதித்துச்செல்கின்றன.இதுதான் முக்கியம்.அன்றாட வாழ்வின் சக்கரச்சுழற்சியில் சாதாரணக் கண்கள் காணத்தவறுகிற இதுபோன்ற காட்சிகளை உற்று நோக்கிச் சக மனிதரான வாசகனின் மனதிற்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதுதான் ஒரு படைப்பாளியின் சமூகக் கடமையாகும்.அதை வாழைக்குமார் செய்யத்துவங்கியிருக்கிறார்.அதுதான் எனக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது.

    காதல் கவிதைகள் என்கிற பேரில் அவள் கால் கொலுசுகள் பற்றி எழுதி எழுதிக்குவித்து நம்மை இம்சைப் படுத்தாமல்

இன்னொரு முறை
அவளுக்காக அழுவதற்கு
என் உடம்பில் திராணியில்லை

என்பதாகவும்

விரலுக்குள் நுழையாத மோதிரத்தை
அழுத்தித் திருகி நுழைப்பதில்
எந்த வித நியாயமும் இருப்பதாய்
எனக்குத் தெரியவில்லை
இருப்பினும் நீ
தகுந்த மோதிரத்தை விடுத்து
வேறொரு விரலைத் தேடுவதுதான்
என்னால் சகிக்க முடிவதாயில்லை

   என்று தன் தரப்பு வேதனையைப் பதிவு செய்வதாகவும் என இவரது காதற்கவிதைகள் வேறோரு திசையில் ஆரோக்கியமாகப் பயணிக்கின்றன-தகுந்த மோதிரம் எது என்று தீர்மானிக்கும் உரிமை அவளுக்குத்தானே உண்டு என்கிற அவள் தரப்பு நியாயத்தை மறந்தாலும் கூட.

   பிளாட்பார வாசிகளையும் சாதாரண உழைப்பாளி மக்களையும் பற்றி அக்கறை கொள்ளும் வாழைக்குமார் நல்ல கவிஞராகப் பரிணமித்து வருவார் என்கிர நம்பிக்கையை இந்த முதல் கவிதைகள் எனக்குத் தருகின்றன.வாழ்த்துக்கள் வாழைக்குமார்.

அன்புடன்

ச.தமிழ்ச்செல்வன்
30-03-2010
பத்தமடை
______________________________________________________________________________
சேமிப்புக் கிடங்கு
மூட்டைப் பூச்சிகளையும் பல்லிகளையும்
கொசுக்களையும் தவிர்த்தும்
எதுவும் பிடிபடவில்லை
பாச்சையாக இல்லையெனில்
கரப்பான் பூச்சிகளாக இருக்க வேண்டும்
அநேகமாக ஈக்களாகவும் இருக்கக் கூடும்
மற்றபடி வீட்டில்
வேறேதுவுமான ஜீவராசிகள் உலவுவதற்கான
சாத்தியக் கூறுகள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான்
சில சமயங்களில்
ஊர்ந்து போகும் அரியவகை பூச்சிகளை
நான் பார்த்திருக்கலாம்
ஆனால் இவைகள் தானா
விநோத ஒலியெழுப்பி இப்படிக் கத்துகிறதென
அறுதியிட்டுக் கூறமுடியாத
கீ ... ஓயாது ஒலியெழுப்பும் பூச்சிகள்
எங்கள் வீட்டு மதிலோரத்தில்
சாய்த்தி நிறுத்தப்பட்டிருக்கும்
ஆளுயர உருவங்கொண்ட குளுமையிலிருந்துதான்
தினம் தினம் ஒலியெழுந்திருக்க வேண்டுமென
இறுதி முடிவெடுத்து
அப்பாவிடம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள்
நடத்தியாகிவிட்டது
கோபத்தை தானே வலிய வழிந்து கொண்ட அப்பா
இப்பெதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்
பேசாம பொச்சப் பொத்திக்கிட்டு தூங்குடா
உழைப்பு மிகுதியில் கடிந்து கொண்டார்
சந்தேகம் கிட்டங்கிக்குப் போன விரக்தியில்
என் உறக்கத்திற்கு
தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தன
கீ ... வென ஒலியெழுப்பும் பூச்சிகள் ...

காரணம்
அதிகாலையிலிருந்து
அடம் பிடித்து
கன்னம் வீங்கிய முகத்தோடு
கண்ணீரை மட்டுமே சுமந்து கொண்டு
பள்ளிக்குப் போன போது
பணம் கட்டாததால்
சுற்றுலாவிற்கு தவிர்க்கப் பட்டவர்கள்
நாங்களென அறியப்பட்டு
வகுப்புக்குப் பத்து பேராய்
உம்மென்று இறுகி இருந்தோம்...
எட்டு வயது குழந்தைகளின்
ஏக்கங்களை புரிந்த
ஒன்னாவது வாத்தியார்
அதுவரை நாங்களே பார்த்தறியாத
எங்கள் ஊர் கண்மாயை
ஒரு கதை சொல்லி
மிகப் பெருங்கடலென சுற்றிக் காட்டி
அன்றைய நாள் முழுவதும்
மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்தார்.
அதுவரை நாக்கைத் துருத்தியே
கொடுங்கோலராய் காட்சி தந்தவர்.
அன்று குருவுக்கும் மேலானார்.

ஏன் இத்தனை வருடங்களாக
எங்கள் கண்மாய்
வற்றிக் கிடக்கிறது என்கிற காரணத்தை
வெகு தாமதமாய்த்தான் எங்களால்
புரிந்து கொள்ள முடிந்தது...

வஞசம்
என்றொ
என்னைக் கொட்டிய
ஒரு குளவியை
வஞ்சம் தீர்ப்பதற்காக
நான் தொடர்ந்து இருபது வருடங்களாக
அந்தக் குளவி இனத்தையெ
விடாது விரட்டிக் கொண்டிருப்பதின்
அவசியமென்ன?

என் வீடு மரக்கட்டைகளால்
சூழப்பட்டதாக இருக்கலாம்
அதற்காக
மரவுலகில் இம்மியளவு கொண்ட
எனக்கான பகுதியை
அடைய முயற்சித்திருப்பது குளவிகளுக்கு
எவ்வளவு தைரியத்தை வரவழைத்திருக்கக்கூடும்

குளவிகளின் தாக்குதல்களுக்கு
என் சந்ததிகள்
ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக
தற்காத்துக் கொள்ளும் பொருட்டு
இப்படிச் செய்கிறேனா
அல்லது
வடு மறவா பழியுணர்ச்சியின் பாற்பட்டா?
எதுவாகினும்
ஓர் சமரசம் என்னுள்
குளவிகள் காட்டில் உலாவுவதைப் பற்றி
அதிகம் சிரத்தையில்லை
அவைகள் என் வீட்டில் நடமாடும் வரை
வஞ்சம் தீர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்

சற்று நிதானித்துப் பாருங்கள்

ஒரு முழுப் பூசணிக்காயை
சோற்றில் மறைக்கும் உத்தி
என்னுடைய புத்தியாகக்கூட இருக்கலாம்
ஒருவேளை
அந்தக் குளவிகள்
என்னை வஞ்சம் தீர்ப்பதற்காகக்கூட
இத்தனை வருடங்களாக
தொடர்ந்து படையெடுத்துக் கொண்டிருக்க
வாய்ப்புள்ளதுதானே...

கத்திரித் தோட்டம் செல்வோர் கவனத்திற்கு
உங்கள் தலையைச் சுற்றிலும்
கண்கள் இருக்கிறதென்று
முதலில்
கத்திரிச் செடியிடம் தெரிவித்துவிடுங்கள்
இல்லையெனில்
ஏமாந்து கொண்டிருக்கும் முட்டாள்களுக்கெல்லாம்
நீங்கள் கீழானவர்களாவீர்கள்

நாங்கள் விவரமானவர்கள் என்றேh
திறமைசாலிகள் என்றேh
உங்கள் வாய்ச் சவடால்களை
அவ்விடத்தில்
ஒரு போதும் மருந்துக்குக் கூட
உளறித் தொலைக்காதீர்கள்

மிக முக்கியம்
கததிரித் தோட்டம் போட்டிருப்பவன்
ஒரு தேர்ந்த ஞானி
என்பதை மனதில் வைப்பது
எச்சரிக்கை
சலனமற்று இருப்பவர்களை
அறுவடை சமயம்
உடன் அழைத்துச் செல்வது
விளைவு
என்ன நேரிடினும்
அதற்கு நீங்களே முழுபொறுப்பேற்கும்
சுழ்நிலைக்கு ஆளாதல்

கத்திரியோ
தோட்டக்காரனோ
ஏதும் உங்களுக்கு
கற்றுத்தரப் போவதில்லையெனினும்
வாழ்வின் எவ்வித
சிக்கலான முடிச்சுகளையும்
அவிழ்ப்பதற்கான திறனைப் பெறுவீர்கள்
என்பது மட்டும் திண்ணம்

இதில் என்னை
முன்னத்தி ஏர்யென நினைத்துக் கொண்டு
ஒரு முறை
கத்திரித் தோட்டம் சென்று வர
என் அறிவுரைகளைத் தவிர
வேறு வழியில்லை உங்களுக்கு
குறிப்பு
ஆயத்தமான பிறகே
சந்தேகங்களுக்குண்டான தௌpவையும் தீர்வையும்
உங்களால் பெற முடியும்

உயிர்த்தெழுந்து மரித்தல்


ஒரு காகம்
எங்கள் வீட்டின் முன்னெ
வெகு நெரமாக கரைந்து கொண்டிருந்தது
வெளியெ வந்த பாட்டி
உங்கள் தாத்தாதான்
காக்கா வடிவத்தில் வந்திருப்பதாகச் சொல்லி
ஒரு நீண்ட புலம்பல்களுக்கிடையெயும்
கண்ணீரை விட்டபடியெ உள்ளெ பொனாள்

நாங்கள் திரும்பிய மறுகணம்
எங்கிருந்தொ பறந்து வந்த ஒரு கல்
அந்த காகத்தின் மீது பட்டுத் தெறித்ததும்
சுருண்டு விழுந்தது

பாட்டிக்கொ
தாத்தா இரண்டாவது முறையாக
உயிர்த்தெழுந்த நிம்மதி
எங்களுக்கொ
தாத்தா இரண்டாவது முறையாக
மரித்துப்பொன துக்கம்...

சாப விமோசனம்
அடித்தல் திருத்தல்களினால்
ஒரே குறுக்குவெட்டுக் கோட்டின் மூலம்
நிராகரிக்கப்படுகிறேன்
நான் பிழைகளை சரி செய்த பின்னும்
மொழியின் ஆளுமையால்
எங்கோ ஒளிந்திருக்கிற
ஒற்றைச் சொல்லினாலும்
என்னுடைய நிராகரிப்பு உறுதி செய்யப்படுகிறது
எல்லாம் ஆனதன் பிறகும்
மனுவின் மேல்முறையீட்டு எண்ணத்தை
தேவையற்றதென ஒதுக்கும் சந்தர்ப்பங் கூட
எனக்கு கை கூடி வரவில்லை

இருப்பினும்
ஆயுள் முழுவதும் வாழ்வது பற்றியான
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே
என்னிடம் ஏக்கங்களே மிஞ்சியிருந்தாலும்
என் நினைவுகளை அண்ட விடாமல்
அவள் விலக்கியே வைத்திருக்கிறhள்

சிதிலமாக்கப்பட்ட என் இயலாமையை
யாராவது கிளறும்போது மட்டும்
நா எழாமல்
கூனிக் குறுகிப் போகிறேன்
அது எனக்கு விதிக்கப்பட்ட
சாபம் என்றhலும்
கசங்கிப்போன வெற்றுத் தாளிலும் மையிட்டு
ஒரு கவிதையை
என்னால் எழுதிக் கொள்ள முடிகிறது...

வாழ்க்கைத் துணை

என் சந்தோஷங்களை
பகிர்ந்து கொள்ள
அவள் என்னிடம் நெருங்கியதுகூட இல்லை
அவள் ஞானிகளை விடவும்
பக்குவம் பெற்றவளாயிருக்கிறாள்

என் எல்லாத் துக்கங்களையும்
தவறமல் அரவணைத்துக் கொள்ள மட்டும்
அவள் காலந் தாழ்த்தியதேயில்லை
அவள் அற்ப புழுவுக்கு சேவை செய்யும்
பேற்றைப் பெற்றிருக்கிறhள்

தலையணையை விடவும்
ஒருத்தி
எனக்கு ஆத்மார்த்தமாக
இருந்துவிடப் போகிறhளா என்ன ?

அவளை திருமணஞ் செய்வதில்
எனக்கொன்றும் இழுக்கு
நேர்ந்துவிடப் போவதில்லை
இருப்பினும் நான்
நிஐத்தில் வாழ வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறேன்
அவள் மேனியெங்கிலும்
என் இயலாமையின்
எச்சமென
கண்ணீர்த் துளிகள் படர்ந்து
உப்பேறிப் போயிருக்கின்றன...

நானும் ஒருவன்
எந்தவித எதிர்பார்ப்புகளற்றும்
விதிவிட்ட வழியென்று
சமாதானம் கொள்ள முடியவில்லை

சிலருக்குப் பொருந்திப் போகிறது
சிலர் பொருத்திப் பார்ப்பதேயில்லை

இனி இவளுக்காகவும்
பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்

குலுக்கலை எதிர்நோக்கியிருக்கும்
கோடானுகோடி துரதிருஸ்டசாலிகளுள்
நானும் ஒருவன்

அலங்காரம்
பிளக்ஸ் பேனர் திரைமறைவில்
குளித்து உடை மாற்றும்
பிளாட்பாரவாசிப் பெண்கள்
அருகில் நிறுத்தப்பட்டிருக்கும்
ஸ்கூட்டரிலோ அல்லது
கார் கண்ணாடியிலோ
தங்களின் முகம்பார்த்து
அலங்கரித்துக் கொள்கிறhர்கள்
பூவும் பொட்டும்
தோடும் முக்குத்தியும்
தங்கமும் வைரமும்
பவுடரும் வாசனை திரவியமும்
இன்னபிற எதுவுமின்றி...

பரிகாரம்

அப்பாவின் சட்டைப் பையில்
தயங்கித் தயங்கி எடுத்த
ஒரு ருபாய் திருட்டுப் பணத்தில்
ஒரு பனியாரம்
ஐந்து பைசா வீதம்
ஐம்பது பைசாவிற்கு
பத்துப் பணியாரத்தைத் தின்றுவிட்டு
வீடு திரும்பகையில்
அப்பாவிடம் அடிவாங்குகிறான்
ஒன்றும் தெரியாத தம்பி
தவறு செய்த நான்
பரிகாரம் தேடுகிறேன்
மீதிப் பைசாவை தம்பிக்குக் கொடுத்து...