குழந்தைகள் வரையும் ஓவியத்தை உற்று நோக்கினால், பறவைகள் சில பறந்து கொண்டிருக்கும், மலைகள் முக்கோணமாக உயர்ந்திருக்கும், நதிகள் நீல வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கும். இவற்றிலெல்லாம் ஏதோவொரு ஒழுங்கு மறைந்திருக்கும். ஆனால் பச்சை நிறத்தில் மரங்களும் செடிகளும் கொடிகளுமென காடுகள் ஒழுங்கற்று கிறுக்கப்பட்டிருக்கும். இந்த பூமி குழந்தைகள் வரைகிற ஓவியமாக பத்திரப்படுத்தப்பட வேண்டுமென்பது வாழை குமார் போன்ற சூழலியலாளர்களின் அக்கறை.
- கவிஞர். சக்திஜோதி
காட்டுத் தீ ஒரு சதவீதம் கூட இந்தியாவில் இயற்கையாகப் பற்றாது. மூடநம்பிக்கை கொண்ட மனிதர்களாலும், சுற்றுலா என்கிற பெயரில் சென்று மது, புகை பிடித்து தூக்கிபோட்டுக் கும்மாளமிடும் மனிதர்களாலும், மரங்களைக் கடத்தும் கும்பலாலும், திருட்டு வேட்டைக்கார்களாலும், மலைவாழ் மக்களாலும்தான் காட்டில் 100 சதவீதம் தீப்பிடிக்கிறது. (மலைவாழ் மக்கள் என்பவர்கள் இங்கு சில நூறு எண்ணிக்கையில் இருக்கும் பழங்குடிகள் அல்ல) இடி இடித்து, மின்னல் வெட்டி, மூங்கிலோடு மூங்கில் உரசி காடு தீப்பிடிக்கிறது என்பதும், காடு எரிந்த பின்னர் புதிதாய் முளைக்கும் புற்கள் ஆடுமாடுகளுக்கு ஊட்டசத்து மிக்கது என்பதும், காடு எரிந்து மொட்டையாய் இருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது என்பதும் கடைந்தெடுத்த மூடத்தனம். ஆயினும் மலைவாழ் மக்களின் மீது வனத்துறையினர் விதிக்கும் கட்டுப்பாடுகளின் மீதுள்ள கோபமும் ஒரு காரணம் என்று தெரிய வந்திருக்கிறது. இதை உணர்ந்த மத்திய அரசு, தீத்தடுப்புக்காக பல்வேறு கோடிகளை பட்ஜெட்டில் ஒதுக்கி, ஒரு ஆணையமும் அமைத்தது. ஆனால் வேலைகள்தான் நடந்த பாடில்லை. தமிழகம் முழுவதுமுள்ள பல குன்றுப் பகுதிகள் மட்டுமின்றி கிழக்கு மற...
Comments
Post a Comment