திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைய இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. ஒரு பள்ளி மாணவன் இறங்குவதற்கான அனைத்து உடைமைகளையும் எடுத்து தயாராக வைத்திருந்தான். அநேகமாக விடுதியில் தங்கிப் படிப்பவனாக இருக்க வேண்டும். அவன் ரயில் ஜன்னலை குனிந்து பார்த்தவாறே நடை மேடை வந்துவிட்டதா என அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து எனக்கு எதிர் திசையில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னேன். அமர்ந்தான். நான் அவனிடம் பெயரெல்லாம் கேட்கவில்லை. எத்தனையாவது படிக்கிற என்றேன். 11 வது என்றான். திருநெல்வேலின்னா உடனே உனக்கு என்னென்னலாம் ஞாபகம் வரும்னு கேட்டேன். அல்வா என்றான். இந்த பதில் மனிதனுக்கு முதல் தேவை உணவு என்பதைப் போல் இருந்தது. எவ்வுயிரினத்திற்கும் அடிப்படை உணவு. ஆனால் மனிதனுக்கோ அது சுவையோடு பிண்ணிப் பிணைந்தது. உணவுக் கலை ஒன்றே மனிதனோடு காலந்தோறும் கூடவே வருவது. ஓர் உணவு ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் என்கிற வகையில் அவ்விடத்திற்கு சிறப்பு சேர்க்கிறது எனில் அது உலகளவில் கவனம் பெறக்கூடிய நிலையை அடைகிறது. மற்றும் புவிசார் குறியீட்டைப் பெற்று சிறப்பு சேர்க்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து பாதுகாப்பது ...
முன்பொரு பூனை வளர்த்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு. அப்பூனை ஆணா பெண்ணா என்றே தெரியாது. சில மாதங்கள் கழித்தே ஒருவாறு அது ஆண் பூனை என்று யூகித்துக் கொண்டோம். அதற்கு நாங்கள் இட்ட பெயர் வரி. பெயருக்குதான் அது பூனையே தவிர எங்களுடன் பழகுவதில் நாய் போல. ஆனால் அதனிடம் எஞ்சியிருந்தது என்னவோ புலியின் குணம். நாங்கள் குடியிருந்த இரண்டு தெரு மக்களின் அன்பையும், இரண்டு தெருக்களின் எல்லையை இறுமாப்புடன் நிர்வகித்த ஒரு நாயின் அன்பையும் சேர்த்தே பெற்றிருந்தது எங்கள் பூனை. நாயோடு சகவாசம் பூனைகளின் உலகில் அதற்கு ஒரு புதுத் தெம்பை அளித்திருக்கலாம். நாயைப் போலவே தன் எல்லையை அந்த இரண்டு தெருக்களோடு நிர்ணயித்துக் கொண்டது. தன் எல்லைக்குள் ஒரு கறுப்பு நிற பெண் பூனையை மட்டுமே தன் இணையாக ஏற்று அனுமதித்தது. அதன்பின் தன் எல்லையை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். அதுவும் ஒரு இணையை ஏற்ற பிறகு தெருவின் இங்கு இடுக்களிலும் கூட கண் வைத்து இரவு பகல் பாராமல் பாதுகாத்தது. மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஒரு ஆளாய் வளர்ந்து வந்த வரிக்கு, ஒருநாள் எதிர்பாராமல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனை கூட்டிச்...